சிங்கள கிறீஸ்தவர்கள் – முஸ்லீம்கள் கடும் மோதல்!! பற்றி எரிகின்றது நீர்கொழும்பு

நீர்கொழும்பு - பலகத்துறை தைக்கா வீதியில் முச்சக்கரவண்டி சாரதிகளிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையால்  வாய்தர்க்கம்  சமூக பிரச்சினையாக உருவெடுத்ததால் சில வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டமையால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நீர்கொழும்பு பொலிஸ்   பகுதிகளில் நாளை காலை 7 மணி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், விமான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலைமை சுமூகமான நிலைக்கு வந்துள்ள போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.