யாழ் கோண்டாவில் பகுதியில் ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!! தற்கொலையா? கொலையா?

யாழ்ப்பாணம் கோண்டாவில் தொடருந்து நிலையத்துக்கு அண்மையில் தொடருந்துடன் மோதுண்டு குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றது.

விபத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தலைவர் மதுபோதையில் இருந்தார் என்றும் அதனாலேயே தொடருந்துடன் மோதுண்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.