இலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் !

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் 3வது முறையாகவும் இன்று சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் போஸ் எனும் குழுவால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இம்முறை சிறிலங்காவின் கட்நாயக்கா விமான நிலையத்தை ஊடுருவி அங்கிருந்த தகவல் திரைகளில்  Schedule Screen குறிபிட்ட வினாடிகளுக்கு புலிக்கொடி பறக்கும் காணொளி ஒளிபரப்பபட்டுள்ளதுடன் சிறிலங்காவின் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் தரவுத்தளத்தையும்  பொது வெளியில் வெளியிட்டுள்ளனர் தமிழீழம் சைபர் போஸ் குழுவினர்.

2018  ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில்  இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து சிறிலங்காவை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை உருவாக்கி உள்ளதாக சிங்கள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறிய நிலையில்,  இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017 -2018  ஆம் ஆண்டுகளில்  மே மாதம்18ம் திகதியும் 300க்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் 2018  நவம்பர் மாதம்  விநாயகமூர்த்தி முரளிதரனின் டுவிட்டர் பக்கத்தையும்       இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கீழ் வரும் இணைப்பில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட இணையங்களின்  தொகுப்பு. -தாரகம்.com -

http://kuwaitembassy.net/news.php?news_id=294
http://www.eaglewings.lk/
http://thesaleshop.lk/
http://cellcorner.lk/
buddhamissions.com/
http://clouds.lk/
http://digidots.lk/
dollarcorporation.com/
marvel.lk/
http://royal1970.org/
sharmfernandoassociates.com/
thewaves.lk/
மேலும் இணையங்களுக்கு கீழ் வரும் இணைப்பில் சென்று பார்வையிடலாம்
https://mirror-h.org/search/hacker/24172/