உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மீண்டும் பெற்றோல், டீசல் விலை அதிகாிக்கிறது.

நள்ளிரவு தொடக்கம் எாிபொருட்களின் விலை அதிகாிக்கப்படுவதாகவும், விலை சூத்திரத்திற்கு அமையவே இந்த அதிகாிப்பு செய்யப்படுவதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி பெற்றோல் லீற்றா் ஒன்றின் விலை 3 ரூபாவாலும், சுப்பா் டீசல் லீற்றா் ஒன்றின் விலை 2 ரூபாவாலும்  அதிகாிக்கப்படுகிறது. எனினும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டவில்லை.

புதிய விலைமாற்றத்தின் அடிப்படையில் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை 135 ரூபாவாகவும்  95 ஒக்ரைன் பெற்றோலின் விலை 164 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படுகிறது.

டீசலின் விலையில் மாற்றமில்லை. சுப்பர் டீசலின் விலை 136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சால் மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படும்

எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைவாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. விலைச்சூத்திரம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.