உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ்ப்பாண பெண்களே அவதானம்!! வங்கியில் வேலை என்ற போர்வையில் நாசமானவர்களின் கதை இது!!

அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபா பணத்தினை மோசடி  செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிஸார் கோரியுள்ளனர்.

“யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலும் , தீவக பகுதியில் உள்ள அரச வங்கி கிளையிலும் வேலைவாய்ப்பினை பெற்று தவறுவதாக எட்டு பேருக்கு மேல்
ஏமாற்றி பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன. அந்த மோசடியாளரால் பாதிக்கப்பட்டவர்கள் அது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டால் , அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

“யாழ்ப்பாணம் மாநகர சபையில் பணியாற்றும் நபர் ஒருவர் ஆறு இளைஞர்கள் மற்றும் 2 இளம்பெண்களுக்கு அரச வங்கியில் வேலை வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி 4 இலட்ச ரூபா முதல் 6 இலட்ச ரூபா வரை பணம் கேட்டார்.

வங்கியில் வேலைக்கான நியமன கடிதம் கிடைத்ததும் , பணத்தினை தருவதாக நாங்கள் எட்டு பேரும் அந்த நபரிடம் கூறினோம். அதன் பிரகாரம் கடந்த 18ஆம் திகதி கொழும்புக்கு 8 பேரையும் அழைத்து 17ஆம் திகதியிடபட்ட
நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. அன்றைய தினம் முதலே நீங்கள் வங்கியில் பணியாளராக இணைந்து  உள்ளீர்கள் என அந்த நபர் கூறினார்.

நாங்களும் அதனை நம்பி மறுநாள் எமது நியமன கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த அரச வங்கியின் கிளைக்கு நியமன கடிதத்துடன் பணிக்கு சென்றோம்.

அங்கு எமது கடிதத்தை பார்த்த வங்கி முகாமையாளர், இது தமது வங்கியின் நியமன கடிதம் இல்லை எனவும் இது போலியானது எனவும் கூறும் போதே நாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம்.

அதன் பின்னர் எமக்கு வேலை வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பணத்தினை வாங்கிய நபருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்த போது, தனக்கு அது பற்றி தெரியாது எனவும் தமக்கு வேறு நபரே வேலை வாய்ப்பு இருப்பதாக கூறியதனாலையே அவரிடமே உங்களை அழைத்து சென்றேன்.

அவரிடம்தான் அது தொடர்பில் கேட்க வேண்டும் என கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார். அதன் பின்னர் அவரது தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்படுகின்றது” என்று பாதிக்கபட்ட ஒருவர்
தெரிவித்தார்.