அவதானம். யாழில் பழைய இரும்பு வாங்குவதாக கூறி வீடுகளுக்குள் நுழையும் காவாலிகள்.
யாழில் சமீபகாலமாக இரும்பு சேகரிப்பதாக கூறி வீடு வீடாக வரும் மர்மநபர்கள் வீட்டில் உள்ளவர்களின் அனுமதியினையும் மீறி வீடுகளுக்குள் நுழைந்து பழைய இரும்புகள் பொருட்களை அபகரிக்கின்றனர்.
மேலும் வீடுகளில் இருப்பவர்கள் தொடர்பிலும் வீட்டு நிலைமை தொடர்பிலும் நோட்டம் விடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறானவர்கள் உதவியினை கொண்டு சமீபகாலங்களாக யாழில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதனை அறிய முடிகின்றது.