உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் ஆசிரியர் வீட்டில் கைவரிசையை காட்டிய திருடர்கள்.

யாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் தங்க நகையைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டுத் தேடி 11 பவுண் நகைகளைத் திருடியுள்ளனர்.

பின்னர் அருகில் உள்ள வீட்டினுள்ளும் திருடும் நோக்குடன் உட்புகுந்த வேளை வீட்டிலிருந்தோர் கண் விழித்து திருடர்களைக் கண்டு கூக்குரலிடத் திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.