உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

புதிய பள்சர் மோட்டார் சைக்கிளை அதி வேகத்தில் பஸ்சுக்குள் செலுத்தியவர் பலி!

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பேருந்துக்கு பின்புறமாகச் சென்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி இரணைமடுச் சந்திக்கு அருகாமையில் 247 கட்டைப் பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

“வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த பேருந்துக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து பேருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த
இருவரில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இலக்கத்தகடு பொருத்தப்படாத புத்தம் புதிய என்எஸ் பல்சர் மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. கிளிநொச்சி செல்வநகரைச் சேர்ந்தவரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அருகில் நின்றவர் ஒருவர் கூறினார் அதிவேக மோட்டார் வண்டியில் மிக வேகமாக வந்த இந்த இளைஞர்கள் இருவரும் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் பயணிகளை ஏற்றிய வண்ணம் நின்ற பஸ் வண்டி மீது பின்பக்கம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டானர் என்று.

வைத்தியசாலையில் இறந்த நிலையில் உள்ள இரு இளைஞர்கள் உடலை பார்க்கும் போது நம்பவே முடியவில்லை. பெரிய அளவில் காயம் ஏதும் இல்லை. அதிவேகமாக வந்த நிலையில் பஸ் வண்டி மீது மோட்டார் வண்டி மோதி நெஞ்சு பலமாக அடிபட்ட நிலையில் இவர்கள் உயிர் பிரிந்து உள்ளது.

இளைஞர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் அண்மையில் புதிதாக வாங்கப்பட்டு பதிவு நிரந்தர பதிவு இலக்க தகடு கூட இன்னும் வராத நிலையில் தற்காலிக வாகன இலக்க தகடே உள்ளது. ஆசை ஆசையாக ஆயிரம் கனவுகளை சுமந்த இந்த இளைஞர்கள் உயிர் அவசரப்பட்ட அதி வேகத்தால் அரை வழியில் போனது என்பது நிதர்சனம்.

நிலமை இவ்வாறு இருக்க சம்பவம் அறிந்து வைத்தியசாலை வந்த உறவுகளின் கண்ணீர் கதறல் வார்த்தைகளால் கூற முடியாது. ஓர் இளைஞரின் சகோதரி “எனக்கு ஒரே ஒரு தம்பி என்று பசமாக வளர்ந்தேன், என்னை விட்டிட்டு போயிட்டியே….” என கதறும் நிலமை எவ்வாறு கூறுவது. இன்னும் ஏராளமான கண்ணீர் கதறல்கள். அவற்றை எழுத வரிகள் போதாது.

அன்புச் சகோதரர்களே!!!…

அதிவேக உந்துருளி என்பது உங்கள் கனவாக இருக்கலாம். பல கனவுகளை சுமந்த வாழ்கையினை காலனவன் பாதி வழியில் பறித்திட உங்கள் உந்துருளி வேகம் காரணமாக அமைந்து விட கூடாது.

ஆயிரம் ஆயிரம் கனவுகளை சுமந்து கடன் பட்டு மீதி காசை leasing போட்டு கண்மூடித் தனமாக கட்டுக்கடங்காத வேகத்தில் கண்டபடி ஓட்டுவதற்கு முன்னர்

அன்புச் சகோதரர்களே!!!!…

உங்களை நம்பி உள்ள உங்கள்
அம்மா அப்பாவை நினையுங்கள்
சகோதரன் சகோதரியை நினையுங்கள்
காதலியை நினையுங்கள்
மனைவியை நினையுங்கள்
பிள்ளைகளை நினையுங்கள்

நீங்கள் வாழ்வில் பயணிக்க நினைக்கும் உங்கள் எதிர்கால கனவுகளை நியமாக்க வேண்டுமே என நினையுங்கள்.