2 நாளில் 27 ரவுடிகள் கைது. 4 பொலிஸ் குழுக்கள் களத்தில்..

மானிப்பாய் பகுதியில் பொலிஸாா் நடாத்திய துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பி ஓடிய 5 ஆவா குழு உறுப்பினா்களில் இருவா் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் பொலிஸாா். குறி த்த இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனா்.

மேலும் இந்த நடவடிக்கைக்காக விசேட பொலிஸ் குழு ஒன்று உருவாக்கப்பட்டு மானிப்பாய் ம ற்றும் சாவகச்சோி, கொடிகாமம் பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸாா் முடுக்கிவிட்டிருக்கின்றனா்.

இதேபோல் இதுவரை இடம்பெற்ற தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புக்களில் 27 ஆவா குழு ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். மேலும் மீள தலை தூக்கும் ஆவா குழுவை ஒடுக்கவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யவும்

வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மானிப்பாய், கோப்பாய் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி நான்கு விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.