உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

30 இலட்சம்பெறுமதியான முத்துக்களுடன் ஒருவர் கைது!

வவுனியாவில் ரூ. 30 இலட்சம் பெறுமதியான கஜமுத்துக்கள் இரண்டுடன் சந்தேகநபரொருவர்  கைது செய்யப்பட்டுள்னர்.

இன்று (10.07.19) அதிகாலை வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்தே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நாமல்கம பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.