Trending News...

சிறுமி வல்லுறவு!! திருக்குமாருக்கு 39 வருட கடூழிய சிறை.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் பதின்ம வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று மூன்று தடவைகள் வன்புணர்ந்த குற்றவாளிக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா
மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.

“எதிரி சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்துக்கு 3 ஆண்டுகளும் வன்புணர்த்தமைக்கு 12 ஆண்டுகளும் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தச் சிறைத் தண்டனையை குற்றவாளி ஒன்றின் பின் ஒன்றாக அனுபவிக்கவேண்டும். அத்துடன், சிறுமியை இரண்டாவது மற்றும் மூன்றாது தடவை வன்புணர்ந்த குற்றத்துக்கு எதிரிக்கு தலா 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது.

முதலவாது மற்றும் இரண்டாவது தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னர் மூன்றாது மற்றும் நாளாவது குற்றத்துக்கான சிறைத் தண்டனையை குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க முடியும். அதனால் எதிரி 27 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தாயாரின் பாதுகாப்பிலிருந்த 16
வயதுக்குட்பட்ட சிறுமியைக் கடத்திச் சென்று வன் புணர்ந்த குற்றச்சாட்டில் இராசகுமார் திருக்குமார் என்பவர் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சந்தேகநபருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை எதிரிக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்ட போது அவர் சுற்றவாளி என மன்றுரைத்தார். அதனால் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இடம்பெற்றது.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் சட்டத்தரணி பிரசாத் காரியவசம் முன்னிலையானார்.

எதிரி தன்னைக் கடத்திச் சென்று வன்புணர்ந்தமை தொடர்பில் முதலாவது சாட்சியான பாதிக்கப்பட்ட சிறுமி சாட்சியமளித்தார். சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பில் மருத்துவ பரிசோதனையில் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டதாக நிபுணத்துவ சாட்சியத்தில் சட்ட மருத்துவ
அதிகாரி சாட்சியமளித்தார்.