மனைவியைக் கொலை செய்ய நாகபாம்பை அதற்குள் ஏவிவிட்ட சிங்களவன்!! நடந்தது என்ன?

கம்பஹாவில் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன் சிக்கிக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இரண்டுதடவைகள் இவ்வாறான முயற்சியை கணவன் மேற்கொண்டுள்ளார்.  அதில், சமயோசிதமாக சிந்தித்த 52 வயதான மனைவி தப்பித்துகொண்டார்.

வயோதிபமான அந்த குடுபத்தினருக்கு ஒரேயொரு பெண் பிள்ளை மட்டுமே உள்ளது. நாகப்பாம்பை தன்னுடைய மனைவியின் மீது வீசெறிந்து மனைவியை படுகொலை செய்வதற்கு முயன்றுள்ளார்.கம்பஹா நகருக்கு அண்மையில் மனைவி ஜூன் 30ஆம் திகதி வீட்டில் இருந்துள்ளார்.

இதன்போதே அவருடைய கணவன், வீட்டுக்குள்ளிருந்தே மனைவியின் மீது விஷம்கொண்ட நாகப்பாம்பை விட்டு வீசியுள்ளார்.கூச்சலிட்ட மனைவி பாம்பிடமிருந்து தப்பிவிட்டார். எனினும், அதுதொடர்பில் பொலிஸார் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். தன்னுடைய முயற்சியை கைவிடாத கணவன் மீண்டுமொரு தடவையும் பாம்பை போட்டுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அந்த வீட்டுக்குள் பாம்பாட்டியுடன் சென்று சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். அதன்போதே வீடொன்றின் மற்றொரு அறைகுள் பாம்பொன்று இருப்பதை கண்டுள்ளனர். அந்தப் பாம்பு ஏற்கெனவே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதற்கான அச்சத்திலும் ஆக்குரோசித்திலும் இருந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.