யாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது! மக்கள் அவதானம்.

யாழில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கெற்பேலி கிளாலியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

வர்த்தக நிலையமொன்றில் இரண்டு ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களைக் கொடுத்து குறித்த நபர்கள் பொருள்கள் வாங்கிய வேளை அவை போலி நாணயத்தாள் என சந்தேகப்பட்ட வர்த்தகர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து வர்த்தக நிலையத்துக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.