யாழில் ரியுசன் சென்ரரில் நடப்பது என்ன? அதிர்ச்சித் தகவல்கள் இதோ?

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள்
நடத்துவது பாடவிதான வகுப்புகளா!? அல்லது
பட்டிமன்றமா? அல்லது அரசியல் கூட்டங்களா?
அல்லது அரசியல் விழிப்புணர்ச்சிக் கூட்டங்களா?
அல்லது எப்படி வாழ வேண்டும் என்பதற்கான
அறிவுரை வழங்கும் கூட்டங்களா?!!!!
அல்லது மதங்கள் தொடர்பான விரிவுரைகளா?

இங்கே படத்தில் காணப்படுவது யாழ்ப்பாணத்தில்
உள்ள தனியார் கல்வி நிலையத்தின் வகுப்பறை !!!?
அதில் நிறைந்துள்ள மாணவர்களும்!!!!!!!!!!!!!!

என் கேள்வி இப்படி நீள அகலங்கொண்ட வகுப்பறை
நிறைய மாணவர்களை வைத்துக்கொண்டு ஆசிரியர்
எப்படிச் செய்முறை விளக்கங்களை தெளிவு படுத்துவார் ?
படிக்கிறவன் படி அதுபற்றி எனக்கு கவலையில்லை,
பணம் மட்டுமே குறிக்கோள் அதுதானே !

மாணவர்கள் எப்படி இந்த வகுப்புகளில் இருந்து மன
நிம்மதியுடன் கவனச்சிதைவின்றி கல்வி கற்கின்றார்கள்?

முதலில் இப்படியான வகுப்புகளைக் கொண்ட கல்வி
நிறுவனங்கள் உடனடியாக தடை செய்யப்படவேண்டும்!

ஒலிபெருக்கியில் வகுப்பு நடத்துவது தடை செய்யப்
படவேண்டும், கரும்பலகையில் எழுதுவது கடைசி
வரிசை மாணவருக்கு தெளிவாக புரியவேண்டும்!
இந்த நடைமுறைகள் இல்லை என்றால் காரண
காரியமின்றி அந்த தனியார் கல்வி நிறுவனம்
தடைசெய்யப்பட்டே ஆகவேண்டும்இப்படியான கல்வி நிறுவனங்கள் குருவிச்சைகளைவிட
கேவலமானவை, சமுதாயத்துக்கு ஆபத்தானவை! மேலும்
அங்கே கற்கும் மாணவர்களின் ஒழுக்க கோவையும்
கேள்விக்குறியாக மாற வாய்ப்புகளுண்டு ( நாற்பது ஐம்பது
மாணவர்கள் கல்வி கற்ற போதே கேள்விக்குறியானது
மாணவர்களின் நடத்தைகள்)

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு
மிகுந்த கட்டுப்பாடுகள் தேவை, அவர்கள் பணம் பிடுங்கிகள்
மட்டுமல்ல கலாச்சார சீர்கேடுகளுக்கும் துணை போகின்றவர்கள்!

உச்ச பட்சமாக அறுபதுக்கு மேற்பட்ட மாணவர்களை
அனுமதிக்ககூடாது ( பாடசாலைகளில் அதிக பட்சம்
35-40 தான்)

நாங்கள் கூறுவது மாரித் தவக்காய்கள்போலத்தான்
என்பது நன்றாகத் தெரியும்,,, ஆனாலும் கத்தி வைப்போமே
ஒருசிலருக்கு கேட்டு வரப்போகும் மழைப் பிரளயத்திலிருந்து
தப்பினால் மகிழ்ச்சியே!

தனியார் கல்வி நிறுவனங்கள் தேன் எடுக்கும் முடவர்களுக்கு
சமானம்! அவர்கள் ருசி கண்டுவிட்டார்கள்,வேறு சிந்தனைகள்
உருவாக மாட்டாது தினமும் தேன்வேட்டையில்தான் சிந்தனை
இருக்கும், பாவம் தேனிக்கள் (மாணவர்கள் )