யாழ் இந்துக் கல்லுாரி மாணவன் துாக்கில் தொங்கிப் பலியானது ஏன்??

இந்துக்கல்லூரியின் ஈடிணையற்ற கலைச்செல்வம் இவன்
கால்பதிக்காத துறைகள் அரிது பதித்தவை அத்தனையும் பதங்கங்களாய் வென்றவன்.

காலன் தன் கண்ணினை ஓர் தந்தை மீதும் மகன் மீதும் இத்தனை குறுகிய கால இடைவெளியில் செலுத்துவானோ இறைவா
Milo பெடியன் என்று உன்னை நானழைக்கும் போதெல்லாம் மந்தாரமாய் ஓர் மாயப்புன்னகை வீசிய இவன் முகம் மறையாத கோலமாய் மனதில் நிற்கிறது கொஞ்ச நெஞ்சங்களையா நீ சேகரித்தாய் கோடி நெஞ்சங்களையல்லவா காலனிடம் சொன்ன உன் கஷ்டத்தை சொல்ல ஓர் இதயம் கூட கிடைக்கலயோடா
தூக்குல தொங்குற அளவுக்கு என்னடா பிரச்சனை மது???????

நீ எதுக்கோ பயந்து போயிட்டதா கதைக்கினம்டா அப்பிடி இல்லைடானு ஒருக்கா சிரிடா நீ சிரிக்க மாட்டாய்
அப்பாவில பாசமாம்டா அதான் எடுத்துட்டாராம் நீ வாழனும்னு தானேடா அவரும் நினைப்பார் கடவுள் என்ன நியாயம்
சொன்னாலும் உன் இறப்பை ஏற்காது எம் மனம். நல்ல நண்பன் வேண்டுமென்று அந்த மரணமும் நினைத்ததோ…….

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவமுதல்வர் நிர்வாகசபையின்(2018-2019) பொருளாளர் அன்பு நண்பன் கிருஸ்ணகுமார் மதுராங்கனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

இது ஒரு முகப்புத்தகப் பதிவு