குறைந்த வட்டியில் கடன்..!மக்களை சூறையாடும் மோசடி கும்பல்.. மக்களுக்கு எச்சாிக்கை.

சமூக வலைத்தளங்கள் ஊடாக மிக குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறி மக்களிடம் பெருமளவு பணத்தை கொள்ளையிட்ட நிறுவனம் தொடா்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிாிவு எச்சாித்துள்ளது.

அதன் தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இதனை தெரிவித்துள்ளார். flashcashloan.lk. என்ற பேஸ்புக் பக்கம் தொடர்பில் தற்போது பல்வேறுப்பட்ட முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறி பொதுமக்களின் பணங்களை மோசடி செய்து வருவதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.