உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பட்டப்பகலில் யாழ்.நகாில் வீடு புகுந்து கொள்ளை

யாழ்.நகாில் பெருமாள் கோவிலடியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டிலிருந்த 5 பவுண் நகையை திருடி சென்றுள்ளது.

வீட்டின் உரிமையாளர்களான கணவன் – மனைவி வேலைக்கு சென்றுள்ள நிலையில், பிள்ளைகளும் பாடசாலை சென்றுள்ளனர்.

வீட்டில் யாருமற்ற இவ்வேளை உள்ளே புகுந்த திருடர்கள் வீட்டின்னுள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தி அங்கிருந்த 5 பவுண் நகையை திருடி சென்றுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் கடைத்தொகுதிகள் காணப்படுவதுடன் , தனியார் கல்வி நிறுவனங்களும் காணப்படுவதோடு, பகலில் சன நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.