மகனை தூக்கிலிட்டு கொன்ற தாய் எடுத்த விபரீத முடிவு!

அரியலூரில் குடும்பத்தகராறில் இரண்டு வயது மகனை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுமார்க்கெட் தெருவைச் சேர்ந்த மனைவியை இழந்த ஜெயக்குமாரும் கணவரை இழந்த ஸ்மிதாவும் முறைப்படி மறுமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு ரித்தீஷ் என்ற 2 வயது மகன் இருந்தான். நேற்று உறவினர் வீட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த ஸ்மிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து மகனை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.