யாழ் கொக்குவிலில் வீடு புகுந்து காவாலிகள் செய்த அட்டகாசம்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று வீட்டின் கதவு ஐன்னல் மற்றும் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, கோடாரியால் கொத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

இச்சம்பவம் கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள அரச உத்தியோகத்தர்களது வீட்டிலேயே இன்று இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் கணவனும் மனைவும் அரச உத்தயோகம் செய்து வருகின்றனர். இவர்கள் தமது வீட்டைப் பூட்டி விட்டு வீட்டிற்குள் இருந்துள்ளனர். குறித்த வீட்டிற்கு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வந்த ரௌடிகள் வீட்டின் மதிலைப் பாய்ந்த வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இதன் போது வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன் வீட்டில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர். அத்தோடு வீட்டின் முன்பக்க கதவையும் கொத்திவிட்டு மதில் பாய்ந்து தப்பியோடியுள்ளனர்.

இதே வேளையில் ரௌடிகள் தப்பியோடும்போது, அருகிலுள்ள வீடொன்றில் பூட்டப்பட்டிருந்த சிசிரிவி கமாராவைக் கண்டதும் இதனையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.