யாழ் நோக்கி வந்த ஹயஸ் லோரியுடன் மோதி நொருங்கியது!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை புத்தளம் – அநுராதபுரம் வீதியில் சாலியவெவ 19ஆம் மைல்கல் பிரதேசத்தில் வைத்து இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்று, எதிரே பயணித்துக்கொண்டிருந்த லொறியின் பின் பகுதியில் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்னர்.

விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சாலியவெலல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.