அமெரிக்காவை எதிர்த்து Huawei களமிறக்கும் 'ஹார்மனி ஓஎஸ்' - அதிர்ச்சியில் டெக் உலகம் : ரகசியம் என்ன ?

உலக வல்லரசான அமெரிக்கா கடந்த மாதம் ஹூவாய் நிறுவனத்தின் மீது வர்த்தக தடை விதித்தது. அதன் பின்னர் வர்த்தக சந்தையில் ஹூவாய் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை வெகுவாக குறைந்தது. மேலும் அதில் கூகுள், பேஸ்புக் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் மறைமுகமாக சீனாவை அமெரிக்கா பழிவாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஹூவாய் நிறுவனம் தனது சொந்த ஓஎஸ் ஆன ‘ஹார்மனி (Harmony Os) ’யை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹூவாய் பயனாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹூவாய் நிறுவனம் தனது புதிய ‘ஓஎஸ்’ - இயங்குதளத்தை தெற்கு சீனாவின் டோங்குவானில் ஆகஸ்ட் 9ம் தேதி தொழில் வளர்ச்சி மாநாட்டில் வெளிட்டது. இந்த அறிமுக விழாவில், இனி வரும் காலங்களில் ஹூவாய் நிறுவனம், “ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள், ஸ்மார்ட் ஸ்கிரீன்கள் போன்ற பொருட்கள் சந்தையில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, தற்போது உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்கு தளங்களில் இருந்து ஹார்மனி ஓஎஸ் மாறுபட்டது எனவும், தேவைப்பட்டால் புதிய ஹார்மனி ஓஎஸ் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பயன்பாட்டிற்கு எற்றார் போல் புதிதாக வடிவமைக்கப்பட்டும் என தெரிவித்தது.

இந்த தகவலை ஹூவாய் நுகர்வோர் வணிக குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் யூ தெரிவித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கும், வர்த்தக தடைக்கும் சவுக்கடி கொடுக்கும் வகையில், ஹூவாய் நிறுவனம் தனது சொந்த இயங்குதளமான ஹார்மனி ஒஎஸ்-யை அறிமுக செய்துள்ளது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.