காட்டுக்குள் காதலனுடன்..உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை!

காதலனுடன் ஜாலியாக இருக்க காப்பு காட்டுக்குள் போனார் அந்த பெண்.. கடைசியில் காதலனை அடித்து துரத்திவிட்டு அந்த பெண்ணை நாசம் செய்துள்ளது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ். 25 வயதாகிறது. ஒரு தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் டிரைவராக உள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும், கல்யாணம் ஆன 32 வயது பெண்ணுடன் தினேஷூக்கு உறவு ஆரம்பமானது.

2 பேரும் லீவு நாட்களில் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து ஜாலியாக இருப்பார்களாம். அப்படித்தான் நேற்று முன்தினமும் பைக்கில் நெய்யமலை காப்புக் காட்டுக்கு சென்றிருக்கிறார்கள். பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, இருவருமே ஆளில்லாத அந்த காட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.

அந்த நேரம் பார்த்து, 6 பேர் கொண்ட கும்பல் அடிவாரத்துக்கு வந்தது. யாருமே இல்லாத இந்த இடத்தில் பைக் ஏன் நிற்கிறது என்று சந்தேகித்து, காட்டுக்குள் சென்றது. அப்போதுதான் காதல் ஜோடி காட்டுக்குள் இருந்து வெளியே வந்துள்ளது. அந்த பெண்ணை பார்த்ததும், தினேஷை அந்த கும்பல் மிரட்டி சரமாரியாக தாக்கியது.

பிறகு 6 பேரும் அந்த பெண்ணை அதே காப்புக் காட்டுக்குள் தூக்கி சென்றனர். "என்னை விட்டுவிடுங்கள்.." என்று அந்த பெண் கதறி கெஞ்சியதை 6 பேரும காதில் வாங்கிக் கொள்ளாமல், மாறி மாறி நாசம் செய்துள்ளது. இதையடுத்து, படுகாயங்களுடன் தினேஷ், அந்த பகுதியில் நடமாடி கொண்டிருந்தவர்களிடம் நிலைமையை சொல்லவும் அவர்கள் விரைந்து வந்தனர்.

ஆனால் அதற்குள் கும்பல் தப்பிவிட்டது. இதுகுறித்து அந்த பெண் ஏத்தாப்பூர் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார். அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணையும் ஆரம்பமானது. இறுதியில் தலைமறைவாக இருந்த 6 பேரையுமே அதிரடியாக கைது செய்தனர். காப்புக் காட்டுக்குள் சென்ற பெண்ணை 6 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆத்தூரில் அதிர்ச்சியை தந்துள்ளது.