7000 நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய இலங்கை யுவதிகள்: இளைஞன் கைது!

பேஸ்புக் வழியாக யுவதிகளை நூதனமாக ஏமாற்றி, அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று, மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரது கைத்தொலைபேசியை சோதனையிட்ட பொலிசார், மயக்கம் போட்டு விழாத குறையாக, பேரதிர்ச்சியடைந்தனர். யுவதிகளின் அந்தரங்கப்படங்கள் சுமார் 7000 அதில் சேமிக்கப்பட்டிருந்தது.

கிரிபத்கொடவை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவனே சிக்கினான்.

முகநூல் வழியாக தன்னை பிரபலமானவராக காண்பித்து, யுவதிகளை வலையில் வீழ்த்தியுள்ளார். விளம்பர மற்றும் நடிப்பு வாய்ப்பு தருவதாக கூறி, தனது பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார். அவரது விளம்பரத்தை நம்பிய ஏராளம் யுவதிகள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்படி தொடர்பு கொண்டவர்கள், முதலில் தமது பெயர், வயது, இடம், பாடசாலை விபரங்களை கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவலாக அனுப்பும்படி கூறப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக, 10 சாதாரண புகைப்படங்கள், 10 கவர்ச்சிப் புகைப்படங்கள் வட்ஸ்அப் வழியாக அனுப்பும்படி கோரப்பட்டுள்ளனர். இறுதியான உள்ளாடைகளுடன் எடுத்த 25 புகைப்படங்களை அனுப்பும்படி கோரப்பட்டுள்ளனர்.

விளம்பர, சினிமா வாய்ப்பை நம்பி நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் ஏராளம் யுவதிகள் தமது ஏடாகூட புகைப்படங்களை அந்த நபரின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில், 15 வயது முதல் 30 வரையான யுவதிகள் ஏமாந்து, தமது அந்தரங்க புகைப்படங்களை அவருக்கு அனுப்பியது தெரிய வந்தது.

புகைப்படங்கள் அனுப்பப்பட்டதும், அவர்களை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தொகை பணத்தை அவர் கேட்பார். அதை செலுத்த தவறினால், யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை சமூகஊடகங்களில் பிரசுரிக்கப் போவதாகவோ, யுவதியின் தந்தையின் தொலைபேசிக்கு அனுப்பப் போவதாகவோ மிரட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த மிரட்டலிற்கு பயந்து பல யுவதிகள் அவருக்கு பணம் செலுத்தியுள்ளனர்.

கைதானவர் கடவத்தையை சேர்ந்தவர். தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார்.

இந்த இளைஞனிடம் ஏமாந்த யுவதியொருவர் கிரிபத்கொட பொலிஸ் நிலைய பெண்கள், சிறுவர் பிரிவில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.