கொக்குவிலில் பகுதியில் ரௌடிகளால் வீட்டில் இருந்தவர்களிற்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றிரவு வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டிலிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றுள்ளது.

முகத்தை கறுத்தத் துணியால் கட்டியவாறு 4 மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் கொண்ட கும்பல் கைகளில் வாள்கள், கத்திகள் மற்றும் கம்பிகள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு கும்பல் சென்றதாகவும் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

close