ஈழம் முழுவதும் பரவும் ஆபத்து! மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கை முழுவதும் தொழு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வருடத்திற்கு 1700 - 2000 தொழுநோயாளர் அடையாளம் காணப்படுகின்றர். அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட தொற்று நோய் பிரிவு வைத்தியர் கிறிஷாந்த தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகம் உள்ள பிரதேசங்களில் இந்த நோயளர்கள் அடையாளம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

யாராவது ஒருவரின் உடலில் தழும்புகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் எனவும் அவ்வாறு சிகிச்சை பெற்றால் மாத்திரமே உடனடியாக குணப்படுத்த முடியும்

உடலில் சந்தேகத்திற்கிடமான அடையாளம் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.