ஈழத்தில் சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்!

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் வசித்துவரும் இந்த குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளது ஏழு பிள்ளைகளுடன் கணவர் கூலி வேலை செய்து அதில்வரும் வருமானத்தில் இந்த குடும்பம் வாழ்ந்துவருகின்றது.

சரியான உணவு உடை மற்றும் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி மிகவும் வறுமை பிடியில் உள்ளனர் சொந்த காணி இன்மையினால் வீட்டுத்திட்டமும் இதுவரை கிடைக்கவில்லை தற்போதைய குடிசை வீடு பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது.

மழைகாலங்களில் இந்த வீட்டில் இருக்க முடியாது பொது மண்டபங்களில் தாங்க வேண்டிய அவலநிலையும் உள்ளது எனவே உதவும் உறவுகளே நீங்கள் எந்த குடும்பத்துக்கு உதவ முன்வருங்கள் அப்பாவி பிள்ளைகள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றார்கள் வீடு சீர்செய்யவும் வாழ்வாதார உதவியும் பிள்ளகைளில் கல்வி செலவுக்கு உங்களினால் முடித்த உதவிகளை செய்யுமாறு கோரியுள்ளனர்.

கருணையுள்ளம் கொண்டவர்கள் இந்த குடும்பத்துக்கு நீங்கள் வழங்கும் சிறு உதவிகள் கூட அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். உதவ முன்வருபவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்.