மகன்களை துடிக்க துடிக்க தூக்கில் தொங்கவிட்ட இளம்பெண்.

இந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெண் ஒரவர், தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுத்த தொல்லையால் தனது இரண்டு மகன்களையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் வசித்து வரும் ராஜு மற்றும் சீதா தம்பதிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, தற்போது ருத்ரா(5) மற்றும் ஸல்(4) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ராஜுவின் பெற்றோர் என்று கூறப்படுகின்றது. நாளுக்கு நாள் சித்ரவதையை தாங்க முடியாத சீதா தனது இரண்டு மகன்களை அழைத்துக்கொண்டு தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது தாய் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் தனது இரண்டு மகன்களை தூக்கில் தொங்கவிட்டு கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார். அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சீதாவின் அண்ணன் கையில் கிடைத்துள்ளது.

அதில் எனது மரணத்திற்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என்று எழுதியுள்ளதை அடுத்து, பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிசார் ராஜு குடும்பத்தாருடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.