விஸ்பரூபமாக மாறும் சஜித்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் தவிக்கும் ரணில்

அண்மைக்காலமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாக கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கோரி கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும் கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ரணில், சஜித் என இரு அணிகள் பிளவுபட்டுள்ளன.

இவ்வாறான நிலை நீடிக்குமாயின் சஜித் தரப்பிலான அணி புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசித்து வருவாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் நாடு திருப்பியதும், சஜித் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் மாற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.