யாழ் இளம்பெண் திருமணமாகி சில நாட்களில் கருகிப் பலியானது ஏன்??

கொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற 26 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இவர் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அடுப்பு எரியும் போதே எண்ணெய் ஊற்றியுள்ளார்.

இதனால் அடுப்பு வெடித்துள்ளதுடன், குறித்த பெண்ணும் பலத்த தீக்காயங்களுக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் திருமணம் முடித்து சுமார் 6 மாதங்களே கடந்துள்ள நிலையில், இவரது திடீர் மரணம் அவரது உறவினர்களை ஆராத துயரில் ஆழ்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.