வெளிநாடு ஆசை காட்டி பெண்களிடம் பாலியல் லஞ்சம்!! நடப்பது என்ன?

வெளிநாடுகளில் தொழில் வழங்குவதாக கூறி பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் கும்பல் தொடர்பில் நாஉல பிரதேசத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பல காலமாக மிகவும் நுட்பமாக முறையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வறுமையின் காரணமாக இந்த மோசடி நடவடிக்கையில் பல பெண்கள் சிக்கியுள்ளனர். வெளிநாடு செல்லும் நோக்கிலும் குடும்பத்தை காற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இவ்வாறான மோசடி கும்பலிடம் சிக்குவதாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பல முறை பெண்களின் வீடுகளுக்கு செல்லும் இந்த கும்பலின் உறுப்பினர்கள் அவர்களுடன் நட்புறவுடன் பழகுகின்றனர். காலப்போக்கில் வெளிநாடு செல்ல தொழில் பெற்றுக் கொடுப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களிடம் பாலியல் லஞ்சம் கோருவதாக குறிப்பிடப்படுகிறது. பகல் நேரங்களில் வீடுகளில் ஆண்கள் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொள்ளும் இந்த கும்பல் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

குடும்ப வறுமை மற்றும் சமூகத்தின் மீது அச்சம் கொண்டுள்ள பெண்கள் இந்த தகவல்களை வெளியே விடுவதில்லை என தெரியவந்துள்ளது.