முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் குண்டுவெடிப்பு!

முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று பிற்பகல் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் காணி ஒன்றில் உரிமையாளரினால் தீ முட்டப்பட்ட போது வெடிகுண்டொன்று வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.