புடவையை செருகிக் கொண்டு.. பிரேக் டான்ஸ் ஆடும் தாய்.. வீடியோ!

வீட்டின் ஹாலில் தன் குழந்தையுடன் இளம் தாய் காணப்படுகிறார். அந்த குழந்தைக்கு உற்சாகம் ஊட்ட டான்ஸ் ஆட வைக்கிறார். இந்தி பாட்டு சத்தம் கேட்கிறது. குழந்தையும் ஆடிக் கொண்டே இருக்கிறது.

திடீரென பாதியிலேயே டான்ஸை விட்டுவிட்டு போய்விடுகிறது. திரும்பவும் அந்த குழந்தையை டான்ஸ் ஆட வைக்க, தானே எழுந்து ஆடுகிறார் அந்த தாய். வெகு இயல்பாகவும், அநாயசமாகவும் வளைந்து வளைந்து ஆடுகிறார். முறையாக இவர் டான்ஸ் கற்று கொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொரு டான்ஸ் மூவ்மென்ட்டுக்கும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. இதை அங்கிருப்பவர்கள் யாரோ வீடியோ எடுத்துள்ளனர்.