யாழில் இளைஞனை நசுக்கி கொன்ற ஹயஸ் தப்பி ஓட்டம்!! (Photos)

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதன் பின்னிருக்கையில் இருந்து பயணித்த இளைஞன் வீதியில் தூக்கி எறியப்பட்டார்.

இளைஞன் மீது ஹைஏஸ் வாகனம் எறியதால் படுகாயமடைந்த அவர் நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் இன்று அதிகாலை உயிரிழந்நதார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் சிறிப்பிட்டி பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

தொண்டைமானாறு கெருடாவிலைச் சேர்ந்த அருந்தவராசா அரவிந்தன் (வயது-22) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தொண்டமனாறுக்கு இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிள் ஸ்லிப்பாகி விபத்துக்குள்ளாகியது என்று விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.

“இதன்போது பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞன் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில் அவர் மீது வீதியால் பயணித்த ஹைஏஸ் வாகனம் ஏறிச் சென்றுள்ளது. அந்த ஹைஏஸ் வாகனச் சாரதி வாகனத்தக நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றும் அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.