டியூசனில் 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்.

மொனராகலைப் அரச பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் ஆசிரியை ஒருவர் , 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை டியூசன் வகுப்பிற்கு வருமாறு, தமது வீட்டிற்கு அழைத்து மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மாணவன் வீட்டிலிருக்கும் போது, ஆசிரியை அடிக்கடி தொலைபேசி மூலம்  தொடர்பு கொண்டதை அறித்த மாணவனின் தாய் சந்தேகம் கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவர் மகனுக்குத் தெரியாமல் மகனின் தொலைபேசியை எடுத்து ஆராய்தபோது அதில் ஆசிரியையிடமிருந்து மகனுக்கு வந்த தவறான குறுந்தகவல்களைக் கண்டுள்ளார்.

இது குறித்து மாணவனின் தாய் மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து பொலிசார் ஆசிரியையையும் நேற்றையதினம் மாணவனையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியைக்கும் மாணவனுக்குமிடையில் கடந்த ஒருவருடமாக மாணவனை கட்டாயப்படுத்தி தமது வீட்டிற்கு வரவழைத்து ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த ஆசிரியை இரு பிள்ளைகளுக்கு தாயானவர் என்றும் கணவரை விட்டு பிரிந்து வாழ்பவரென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களை மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யமுன்பு , மாணவனின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டி மாணவனை மொனராகலை வைத்தியசாலையில் பொலிசார் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.