யாழில் 15 வயது மாணவியுடன் இளைஞன் காமலீலை!! வீடு கொடுத்த பெண்ணுக்கும் விளக்கமறியல்!!

வலிகாமம் பகுதியைச் சேர்ந்த பதின்ம வயது மாணவி ஒருவரை அவரது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து அழைத்து வந்து குடும்பம் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் 19 வயது முஸ்லிம் இளைஞன் மற்றும் அவருக்கு உடந்தையாகவிருந்த பெண் ஒருவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று உத்தரவிட்டது.

19 வயது இளைஞனுக்கும் 15 வயது நிரம்பிய மாணவிக்கும் காதல் ஏற்பட்டு பெண்ணின் உறவினர் வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர். அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின்
பெற்றோர் முறைப்பாடு வழங்கினர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாணவியையும் இளைஞனையும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்டனர். மாணவி மருத்துவ சோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இளைஞனும் அவருக்கு தங்குமிடம் வழங்கி உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுச் சனிக்கிழமை முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

அத்துடன், வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இளைஞனையும் பெண்ணையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்று, பெண்ணின் கைக்குழந்தையை சிறைச்சாலையில் தாயார் வைத்திருக்கவும் அனுமதியளித்தது.