யாழில் 21 வயதான இளம்பெண் தீப்பற்றி மரணம்.

யாழில் மண்ணெண்னைப் போத்தலில் பற்றிய தீயை அணைக்க முயன்றபோது, உடலில் தீப்பற்றியதால் இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

நவாலி தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த 21 வயதான கரோன் விதுசாளினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 28ம் திகதி மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மண்ணெண்னைப் போத்தலில் பற்றிய தீயை அணைக்க முற்பட்டபோது குறித்த பெண் மீது தீ பரவியுள்ளது. 

இந்நிலையில் தீக்காயங்களுக்குள்ளான குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.