39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரி - டிரைவர் கைது

லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே இன்று ரோந்துப் பணியில் இருந்த போலீசார் அவ்வழியாக வந்த பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டனர்.

கண்டெய்னரின் உள்ளே கிடந்த 39 பிணங்களை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சுமார் 25 வயது மதிக்கத்தக்க லாரியின் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான டிரைவர் வடக்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ள நிலையில் அந்த லாரியில் இறந்து கிடந்தவர்கள் யார்? அவர்கள் அனைவரும் அடைக்கலம் தேடி லண்டனுக்குள் நுழைய முயன்றவர்களா?

அல்லது. வேறு இடத்தில் கொல்லப்பட்ட பிணங்களா? என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.