நிறை மதுபோதையில் 42 பணிகளுடன் யாழ்ப்பாணம் வந்த பஸ் சாரதி கைது..!

பேருந்தில் 42 பயணிகளுடன் நிறை மதுபோதையில் யாழ்ப்பாணம் வந்த இ.போ.ச சாரதியை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

நேற்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி சாலியவௌ 18ஆம் கட்டை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாரதி மதுபானம் அருந்திய நிலையில், அதிக வேகத்துடன் கவனயீனமாக பேருந்தை செலுத்துவுதாக கிடைத்த தகவலுக்கு அமைய,  குறித்த பேருந்தை இடைமறித்த காவல்துறையினர் சாரதியை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.இதன்போது, குறித்த சாரதி கொழும்பில் வைத்து மதுபானத்தை அருந்திய நிலையில், இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தை செலுத்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் - காரைநகர் பேருந்து சாலையில் பணியாற்றும் 52 வயதுடைய குறித்த சாரதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.