யாழில் அதிரடிப்படையினா் அதிரடி. சுற்றிவளைப்பில் ஆவா குழு முக்கியஸ்தா் கைது!
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்படையவா் என கருதப்படுபவரும், ஆவா குழுவின் முக்கிய நபா்களில் ஒருவருமான தனுரொக் என்ற இளைஞனை விசேட அதிரடிப்படையினா் கைது செய்திருக்கின்றனா்.
இன்று அதிகாலை 5.45 மணியளவில் பெருமெடுப்பில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையி னரும் குவிக்கப்பட்டு மானிப்பாய்- லோட்டன் வீதியில் உள்ள தனுரொக்கின் வீட்டை முற்றுகை யிட்ட பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப்படையினா்,
கைது செய்துள்ளனா்.
இதேவேளை சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அந்த வீட்டில் தாயாரும் மகளும் மகனும் இருந்ததனர். குடும்பத்தலைவர் கொழும்புக்கு சென்றிருந்ததாகவும் தெரிய வருகின்றது. பெண் பொலிஸாரும் குறித்த
சுற்றிவளைப்புக்கு சென்றிருந்தனர். அவர்களால் வீட்டில் இருந்த பெண்கள் உடற்சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடத்திய அதிரடிப்படையினரால் வீட்டு வளவிலிருந்ததாக தெரிவித்து
03 துருப்பிடித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து அந்த வீட்டிலிருந்த இளைஞன் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இளைஞர் அதிரடிப்படையினரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த இளைஞர் மீது வன்மமான முறையில் பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இவ்வாறு 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பல வழக்குகளில் இளைஞர் நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.