போதனா வைத்தியசாலையில் நவீன சி.ரி.ஸ்கானர் சேவை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நவீன சி.ரி.ஸ்கானர் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயா் தமிழா்கள் மற்றும் தாய தமிழா்களின் 2 கோடி ரூபாய் நிதி பங்களிப்பில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட CT Scan வழங்கப்பட்டிருந்தது.

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் காலை இந் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவர் சி.தவராசா, மற்றும் வைத்தியர்களும் கலந்து கொண்டனர்.