சொகுசு காரில் நடமாடும் விபச்சாரம். ஈடுபட்ட அழகிகள் சிக்கினர்!

நடமாடும் விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு தாய்லாந்து அழகிகளையும், அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஒருவரையும் வெள்ளவத்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இணையத்தளங்களின் ஊடாக வாடிக்கையாளர்களை பெற்று, சொகுசு காரை பயன்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பலே சிக்கியது.

வெள்ளவத்தை பொலிசார் இணையத்தளத்தின் ஊடான வாடிக்கையாளர்கள் போல பாவனை செய்து, இவர்களை பொறி வைத்து பிடித்துள்ளனர்.

கைதான இரண்டு தாய்லாந்து அழகிகளும் 24, 36 வயதானவர்கள். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய நுகேகொடவை சேர்ந்தவரும் சிக்கினார். சுற்றுலா விசாசில் இலங்கைக்கு வந்தே இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இணையத்தளம் ஊடான ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் 10,000 முதல் 15,000 ரூபாவரை இந்த பெண்கள் அறவிட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.