ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன். அறம் திரைப்படம் போல் இடம்பெற்ற துயரம்.

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனின் உடலை மீட்க முடியாமல் போராடி வருகின்றனர். 12 மணி நேரத்துக்கும் மேலாக குழந்தையை மீட்க முடியாதால், தேசிய பேரிடர் உதவியின் எதிர்பார்ப்பை கோரி உள்ளதால், அவர்கள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஆரோக்கிய தாஸ் - மேரி. இவர்களின் 2 வயது ஆண் குழந்தை சுஜித் வின்சென்ட்.

இந்நிலையில் ஆள்துளை கிணறு ஒன்று பயன்பாட்டுக்கு வழிஇன்றி மேலே மூடப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மழை பெய்ததால், மேலே மூடப்பட்டிருந்த மணல் அகன்றுவிட்டது.

அந்த சமயத்தில் அதாவது 5.40 மணியளவில் சுஜித், அந்த பக்கமாக சென்றபோது, இந்த குழியை பார்க்காமல் உள்ளே தவறி விழுந்துவிட்டான். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் சொல்லவும் அவர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதன்பிறகுதான் ஆள்துளையின் ஆழம் சுமார் 22 அடி என்று தெரியவந்தது. மருத்துவ மீட்பு குழு மூலம் முதல் வேலையாக ட்டியூப் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.

பின்னர், கிணற்றுக்கு பக்கவாட்டில் ஜேசிபி மூலமாக குழியை தோண்டி அதன் வழியாக குழந்தையை வெளியே எடுக்க முயனற்னர். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் அதிர்வு ஏற்பட்டதால், திடீரென மளமளவென மணல் கிணற்றுக்குள் விழ ஆரம்பித்தது. இதனால் அந்த முயற்சிஅப்படியே கைவிடப்பட்டுவிட்டது.

மூச்சு திணறல்ஏற்படாமல் இருக்க, ஆக்சிஜன் செலுத்தினாலும், கிணற்றுக்குள் இருள் சூழந்து இருக்கும். அதனால் குழந்தை பயந்துவிடக்கூடாது என்பதற்காக கிணற்றுக்குள், வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. இதைதவிர கிணற்றுக்குள் கேமராவையும் அனுப்பி பார்த்ததில், குழந்தை உட்கார்ந்திருந்தது தெரியவந்தது. இதன்பிறகு, குழந்தையின் பெற்றோரை கூப்பிட்டு, ஸ்பீக்கலில் அதிகாரிகள் பேச வைத்தனர்.

மீட்பு பணி தொடர்ந்து கொண்டே இருந்தால், கூடுதல் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு குவிந்தனர். அதேபோல, மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட எஸ்பியும் வந்தனர். இவர்களை அடுத்து, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகியோரும் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் நள்ளிரவையும் தாண்டி கண்காணித்தபடியே இருந்தனர்.

இதன்பிறகு மதுரையில் இருந்து, ரோபோ அறிவியலாளர் மணிகண்டன், நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மீட்பு நிபுணர் டேனியல் ஆகியோரும், ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்று, தாங்கள் வைத்துள்ள கருவிகள் மூலமாக, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இரவு 1.45 மணிக்கு குழந்தை பேச கஷ்டப்பட்டான். எனினும் யாரும் பயப்பட வேண்டாம் என்று மருத்துவ குழுவினர் நம்பிக்கை தெரிவித்து கொண்டே இருந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், ஏற்கனவே விழுந்த இடத்திலிருந்து மேலும் கூடுதலாக 6 அடி ஆழத்துக்கு குழந்தை கீழே சென்றுவிட்டான். அதாவது, 27அடியில் இருந்தவன் 68 அடிக்கு சென்றுவிட்டதால், மொத்த குழுவினருமே சற்று பதட்டமானார்கள்.

எனினும் அதுக்கும் கீழே குழந்தை போக வாய்ப்பு இல்லை என்ற என்பதால், திரும்பவும் விடிய விடிய மீட்பு ஆரம்பமானது. 13 மணி நேரமாகியும் மீட்க முடியாததால், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவி நாடப்பட்டு, அவர்களும் விரைந்துள்ளனர். அவர்கள் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.