இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சடலம்! தீவிர விசாரணையில் பொலிஸார்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் ரத்தக் காயங்களுடன் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நீதவானின் விசாரணைகளின் பின்னர் தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.