யாழ் சிறையில் விதைக்குள் ஹெரோயின் வைத்திருந்த நபர் சிக்கினார்.

புளியம் பழத்திற்குள் வைத்து விதை இருக்கும் இடத்தில் ஹெரோயின்..! யாழ்.சிறைச்சாலைக்குள் ஒருவா் சிக்கினாா்..

யாழ்.சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு புளியம் பழத்திற்குள் சூட்டுசுமமாக மறைத்து ஹெரோயின் போதை பொருளை கொண்டு சென்றவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவரு வதாகது, புளியம் பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஹெரோயின் போதை பொருளை வைத்து பசை கொண்டு ஒட்டி பின்னா் புளியம் பழத்தை சாப்பாட்டு பாா்சலுக்குள் மறைத்து எடுத்துவந்த நிலையில், சோதனையிட்ட அதிகாாிகள் போதைப் பொருளை கண்டு பிடித்ததை தொடா்ந்து அதனை கொண்டுவந்த நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.