யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் மரணம்.

யாழ். உடுவில் பகுதியில் இன்று காலை குளித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தரொவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உடுவில், மல்வம் பகுதியை சேர்ந்த செபஸ்தியான் தேவகுமார் என்ற 41 வயது நபரான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் மரண விசாரணைகள் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.