யாழ் வல்லையில் தலைகீழாகக் கடலுக்குள் ஓடிய வாகனம்

யாழ்- பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லை பாலத்துக்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்தது.
இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது.
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் பருத்தித்துறையில் பொருள்களை இறக்கி விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றது.
சம்பவத்தில் தெய்வாதினமாக சாரதிக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்