பிச்சை எடுக்கும் பாட்டியிடம் லட்சக்கணக்கில் பணம் மற்றும் தங்க நகைகள்.

புதுச்சேரியில் பிச்சை எடுக்கும் பாட்டியிடம், வங்கிக்கணக்கு இருப்பதும் , அதில் லட்சக்கணக்கில் பணமும், கையில் தங்க செயின், மோதிரம், தோடு மற்றும் ரூ.15,000 ரொக்கம் இருப்பதையும் கண்டு நகராட்சி ஊழியர்களை வாயடைத்துப் போயினர்.

புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள ஈஸ்வரன் கோவிலில் பிச்சைக்காரர்களால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக வந்த புகாரை அடுத்து அவர்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பர்வதம்(80) என்ற பாட்டியை அப்புறப்படுத்திய போது அவரிடமிருந்த பை தவறி கீழே விழுந்தது. அதிலிருந்து ரூபாய் நோட்டிகள் சிதறி கீழே விழுந்தன. இதனையடுத்து அதனை எண்ணி பார்க்கும் போது, அதில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் இருந்தது.

அவரது பையில் சோதனை செய்த போது, வங்கி கணக்கும் அதில் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பணமும் இருந்தது. மேலும் பையில், தங்கத்தோடு, செயின், மோதிரமும் இருந்தது. ரேஷன் கார்டும், பென்ஷன் கார்டும் வைத்துள்ள அவர், கணவர் இறந்த பின், கோவிலில் பிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை பாதுகாப்பாக முதியோர் இல்லம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.