தாயின் கண்முன்னே டிப்பர் மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே பலி. (video)

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் வைத்திய சாலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் தாய், மகள் பயணித்தவேளை அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனம் வே கக் கட் டுப்பாட்டை இழந்து துவிச்சக்கர வண்டியுடன் மோ தியதில் து விச்சக்கர வண்டியில் பயணித்த திருநாவற்குளத்தை சேர்ந்த 9 வயதுடைய பிரியாளினி என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே தலை சிதறுண்டு பலியாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவானது. வி பத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பித்துச்செல்ல முயற்சித்த வேளை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை சாரதி மது போதையில் இருந்ததாக அங்கிருந்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றதுடன்,

வி பத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் பொதுமக்களால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தை சேதப்படுத்தியது தொடர்பாக இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தாயின் கண்முன்னே சிறுமி பலியா னமை பலரின் மனத்தையும் பாதிப்படையச் செய்துள்ளதுடன் அப்பகுதியே சோகமயமாக காணப்பட்டது.