அவள் அழகா இருந்தாள்.. நான் போதையில் இருந்தேன்.. பகீர் வாக்குமூலம்

சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இருந்து பெண் ஒருவர் மடிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு டூவிலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒருவர் அப்பெண்ணை பின் தொடந்துள்ளார்.

பின் தொடர்ந்த நபர் பிரபல உணவு டெலிவரி கம்பெனியில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். அப்பெண் தன் வீட்டுக்குள் நுழைந்தபோது கூடவே சென்றுள்ளார். அதை கவனித்த அந்த பெண் யார் நீங்க? என கேட்க உணவு டெலிவரி செய்ய வந்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் தன் வீட்டில் இருந்து யாரும் உணவு ஆர்டர் பண்ணவில்லை என்று அப்பெண் கூறியுள்ளார். ஆனாலும் அந்த ஊழியர் உங்கள் வீட்டில் இருந்து யாராவது ஆர்டர் செய்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தபோது அப்பெண் சத்தம் போட்டுள்ளார்.

உடனே அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர் அந்த நபரை போலீஸாரிடத்தில் பிடித்துக் கொடுத்தனர். விசாரணையில் அந்த நபர் வேளச்சேரி நேரு நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் 32 வயதான பிரசாந்த் என்று தெரியவந்தது.

மேலும் அப்பெண் அழகாக இருந்ததாலும், தான் மது அருந்தியிருந்ததால் அப்பெண்ணிடம் பேச வேண்டும் என்கிற ஆசை உண்டானதாகவும் பிரசாந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.