குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பிய காதலி.. ஷேர் செய்து அசிங்கப்படுத்திய இளைஞன்.

நிர்வாணமாக வீடியோ அனுப்பு.. குளிக்கும்போது வீடியோ எடுத்து அனுப்பு... டிரஸ் மாற்றும்போது வீடியோ எடுத்து அனுப்பு.. என இளம்பெண்ணின் வீடியோக்களை சேமித்து வைத்து.. பிறகு அவைகளை பேஸ்புக்கிலும் ஷேர் செய்த இளைஞனை போலீசார் தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. வெறும் 19 வயசுதான்.. ஆனால் இவர் செய்த அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லை.

இவருடைய ஊரைச்சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த பெண் சூலூர் அருகே தங்கி இருந்து ஒரு காலேஜில் 2-ம் வருடம் படித்துவருகிறார். இருவருமே ஒரே ஊர் என்பதால், சொந்த ஊரில் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள்.. இந்த நட்பு காதலாக மாறியது.. பிறகு தினமும் போனில் பேச ஆரம்பித்தனர்.. வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்தும் பேசினர். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானதால், நிர்வாண நிலையிலேயே செல்போனில் அந்த பெண் பேசியுள்ளதாக தெரிகிறது..

மேலும் கம்ப்யூட்டரில் வீடியோகால் பேசினாலும் இப்படியே நிர்வாண நிலைதானாம். தன்னை நம்பி இந்த கோலத்தில் பேசிய பெண்ணின் வீடியோக்களை மொத்தமாக சேமித்து வைத்து கொண்டே வந்தார் அந்த அஜித்.. இது அந்த பெண்ணுக்கு தெரியாது..

ஒரு கட்டத்தில், டிரஸ் இல்லாமலும், குளிக்கும் போதும் வீடியோ எடுத்து அனுப்ப சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். அந்த பெண்ணும் நம்பி இந்த வீடியோக்களையும் இஷ்டத்துக்கும் எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், திடீரென 2 பேருக்கும் ஏதோ பிரச்சனை வந்துவிட்டது. அதனால் அந்த பெண் அஜித்திடம் சரியாக பேசுவதில்லை.. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித், தன்னிடம் இருந்த அந்த பெண்ணின் நிர்வாண வீடியோக்கள் மொத்தத்தையும் ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டார்.

இதை பார்த்த பிறகு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். எப்போதோ அனுப்பிய பழைய வீடியோக்களைகூட அஜித்குமார் சேகரித்து வைத்தது தெரிந்ததும், இதை பற்றி அவரிடமே நேரடியாக கேட்டார். இதை பற்றி வெளியே அல்லது போலீசில் சொன்னால், ஆசிட் வீசி கொன்றுவிடுவேன் என்று அஜித்குமார் சொல்லவும் வீட்டில் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார் அந்த பெண்.

இதையடுத்துதான், சூலூர் போலீசில் புகார் செய்யவும், போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர். மேலும், அவரது செல்போன், கம்ப்யூட்டரில் இருந்த பெண்ணின் நிர்வாண வீடியோக்களையும் பறிமுதல் செய்தனர்.